Bookmark
2018 ஆவணி மாதம் 16 ஆம் வியாழன் - எப்படி இந்த நாள் நீங்கள் இருக்க வேண்டும்?
மேஷ ராசி
இன்று குடும்ப ஸ்தானத்தை கேது பார்க்கிறார். ஆனால் குரு ராசியைப் பர்ப்பதால் குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.
ரிஷபம் ராசி
இன்று பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை என இருக்கும். குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.
மிதுனம் ராசி
இன்று திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். இரவு நீண்ட நேரம் முழிக்க வேண்டியதிருக்கும்.
கடகம் ராசி
இன்று அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். பதவிகள் வந்து சேரும். விடாமுயற்சியுடன் உழைப்பது நல்லது. அதிகமாக தூரம் செல்ல வேண்டியதிருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து நற்பலனை பெறலாம். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை.
சிம்மம் ராசி
இன்று அதிகமாக சிரத்தை எடுத்து மேலிடத்திற்கு விஷயங்களை வேண்டியதிருக்கும். முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும். மதிப்பெண்கள் சீராக கிடைக்கும்.
கன்னி ராசி
இன்று வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தனஸ்தான ராசியில் சனி சஞ்சாரம் செய்வதால் எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும்.
துலாம் ராசி
இன்று ராசிநாதன் சுக்கிரனுக்கு ஸ்தான பலம் நன்றாக இருந்தாலும் திருக் பலம் குறைந்து காணப்படுவதால் பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும்.
விருச்சிகம் ராசி
இன்று பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களிடம் யதார்த்த நிலையை கடைபிடிக்கவும். எந்தவொரு விஷயத்திலும் ஆராய்ந்து முடிவெடுக்கவும்.
தனுசு ராசி
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். மிக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். இரவு நீண்ட நேரம் விழித்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
மகரம் ராசி
இன்று குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். வெளியூர் சென்று தங்கியிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். தன குடும்பாதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருந்து வரும்.
கும்பம் ராசி
இன்று கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். தாய்மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும்.
மீனம் ராசி
இன்று சகோதர சகோதரிகள் வகையில் எந்த ஒரு முடிவும் எடுக்கும் முன் ஆலோசனை செய்வது நல்லது. எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பதுநல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. பணம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடும் முன் குடும்பத்தினரின் ஆலோசனைகளைப் பெறுவது சாலசிறந்தது.
Social Subscribox
Top